சினிமா செய்திகள்

தீபாவளிக்கு விஜய் - விஜய் சேதுபதி படங்கள் மோதல் + "||" + Diwali Vijay and Vijay Sethupathi movies

தீபாவளிக்கு விஜய் - விஜய் சேதுபதி படங்கள் மோதல்

தீபாவளிக்கு விஜய் - விஜய் சேதுபதி படங்கள் மோதல்
பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவது இல்லை.
 கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தது.

வருகிற தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்த மாதமே (ஆகஸ்டு) திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதனால் விஜய் படத்துக்கு போட்டியாக எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.


பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கி பிரபலமான விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை வேட தோற்றத்தில் விஜய்யின் ‘பிகில்’ - ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் விஜய் இரட்டை வேட தோற்றத்தில் நடித்துள்ள 63-வது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் பெயர் நேற்று வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
2. போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு வழக்கு, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்
போலியோ சொட்டு மருந்து முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித்குமார், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரர் களாக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்
விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.