சினிமா செய்திகள்

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார் + "||" + Film director Pa.Ranjith's father passed away due to ill health

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அட்டக்கத்தி என்ற படம் வழியே இயக்குனராக அறிமுகம் ஆனார்.  இதன்பின் அவரது இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெட்ராஸ் படம் அவரை அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இதன்பின்பு நடிகர் ரஜினிகாந்தின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனரானார்.  அவரது தந்தை பாண்டுரங்கன் சமீப நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவருக்கு வயது 63.  அவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் நடைபெறும்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.