சினிமா செய்திகள்

சஸ்பென்ஸ்-திகில் நிறைந்தசுசீந்திரனின் `ஏஞ்சலினா' + "||" + Susindran's Angelina

சஸ்பென்ஸ்-திகில் நிறைந்தசுசீந்திரனின் `ஏஞ்சலினா'

சஸ்பென்ஸ்-திகில் நிறைந்தசுசீந்திரனின் `ஏஞ்சலினா'
புதுமையான-சிக்கலான கதைகளை வணிக அம்சம் கலந்து கொடுத்து வரும் டைரக்டர் சுசீந்திரன் அடுத்து, `ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது, சஸ்பென்ஸ்-திகில் படம்.
`ஏஞ்சலினா' படத்தை பற்றி டைரக்டர் சுசீந்திரன் கூறுகிறார்:-

``ஏஞ்சலினா, அடிப்படையில் சஸ்பென்ஸ் நிறைந்த திகில் படம். ஒரு விசாரணையுடன் படம் தொடங்கும். படத்தின் மையக்கரு, ஒரு பெண் எப்படி வாழ வேண்டும்? சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும்? என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாக கொண்ட படம, இது.

கதாநாயகனாக சரண் சஞ்சய் அறிமுகமாகிறார். `கோலி சோடா' நாயகி கிரிஷா குரூப் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, தேவதர்ஷினி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். நானும், அவரும் இணைந்து பணிபுரியும் 6-வது படம். கேவி சாந்தி தயாரித்துள்ளார். அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.

ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் படம் ஓடும்.''