சினிமா செய்திகள்

அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் 33- வது இடம் அக்‌ஷய்குமாருக்கு ரூ.444 கோடி வருமானம் + "||" + 33rd place For Akshay Kumar 444 crore in income

அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் 33- வது இடம் அக்‌ஷய்குமாருக்கு ரூ.444 கோடி வருமானம்

அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் 33- வது இடம் அக்‌ஷய்குமாருக்கு ரூ.444 கோடி வருமானம்
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 பேர் கொண்ட பிரபலங்கள் பட்டியலில் அக்‌ஷய்குமார் இடம் பிடித்துள்ளார்.
இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ஆண்டுக்கு 3, 4 படங்களில் நடிக்கிறார்.

பேட்மேன், கேசரி படங்கள் அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தன. மிஷன் மங்கல் படத்தில் இப்போது நடிக்கிறார். விளம்பர படங்களிலும் வருகிறார். இதனால் அவருக்கு வருமானம் குவிகிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.


இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து அக்‌ஷய்குமார் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. 33-வது இடத்தில் அவர் இருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பிரபலங்கள் சம்பாதித்த பணத்துக்கு செலுத்திய வரி பணத்தை வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளனர். அக்‌ஷய்குமாரின் ஆண்டு வருமானம் ரூ.444 கோடி என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 76-வது இடத்தில் இருந்த அவர் இந்த ஆண்டு 33-வது இடத்துக்கு வந்துள்ளார். கடந்த வருடம் 82-வது இடத்தில் இருந்த சல்மான்கான் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அதுபோல் 2017-ல் 65-வது இடத்தில் இருந்த ஷாருக்கான் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பட்டியலில் இல்லை. பிரபல ஹாலிவுட் பாடகி எழுத்தாளர் நடிகை, தயாரிப்பாளர் டைலர் சுவிப்ட் முதல் இடத்தில் இருக்கிறார்.