சினிமா செய்திகள்

தெலுங்கு பிக்பாஸில் படுக்கைக்கு அழைப்பதாக புகார் ஸ்வேதா ரெட்டி + "||" + In the Telugu Big Boss Complaining of being called to bed Swetha Reddy

தெலுங்கு பிக்பாஸில் படுக்கைக்கு அழைப்பதாக புகார் ஸ்வேதா ரெட்டி

தெலுங்கு பிக்பாஸில் படுக்கைக்கு அழைப்பதாக புகார் ஸ்வேதா ரெட்டி
இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டெலிவிஷனில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்க்கிறார்கள்.
 இதில் பங்கேற்கும் நடிகர்-நடிகைகளுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்கிறார்கள். அவர்கள் சண்டை போடுவதையும், அழுவதையும் ரசிக்க பெரிய கூட்டம் உள்ளது.

தமிழ் பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியை முந்தைய 2 நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல். தெலுங்கில் விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.


இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். தெலுங்கு பிக்பாஸை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களை படுக்கைக்கு அழைப்பதாக புகார் கிளம்பி உள்ளது. இதுகுறித்து தெலுங்கு டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஸ்வேதா ரெட்டி கூறியதாவது:-

“எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு தேடி வந்தது. அதை நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக்கு போன் செய்து உங்களை போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அவர் என்ன அர்த்தத்தில் பேசினார் என்பது புரிந்தது. இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்து விட்டேன்.”

இவ்வாறு அவர் கூறினார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.