சினிமா செய்திகள்

அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம் + "||" + Anushka Arundhati Part 2

அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்

அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்
அனுஷ்காவின் அருந்ததி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
ஹா லிவுட்டில் வெற்றி பெற்ற ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், எக்ஸ்மேன், ஜுராசிக் பார்க், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களின் பல பாகங்கள் வெளியாவதுபோல் தமிழிலும் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகி நல்ல வசூல் பார்க்கின்றன. ஏற்கனவே ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது.


கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, தனுசின் மாரி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி, அரண்மனை, களவாணி உள்ளிட்ட பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன. காஞ்சனா, சிங்கம் ஆகிய படங்கள் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன், துப்பாக்கி, வேதாளம், பையா, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் 2-ம் பாகம் பட்டியலில் உள்ளன.

தற்போது அனுஷ்காவின் அருந்ததி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படம் தமிழ், தெலுங்கில் 2009-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளியது. இதில் இரு வேடங்களில் நடித்த அனுஷ்காவுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அருந்ததி 2-ம் பாகத்தை தமிழில் எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் எடை கூடி இருப்பதால் வேறு நடிகையை தேர்வு செய்யலாமா? என்று யோசிக்கின்றனர். பிரபல இந்தி நடிகை பாயல் ராஜ்புத் பெயரும் அடிபடுகிறது. இவர் தமிழில் ஏஞ்சல் படத்திலும், தெலுங்கில் தயாராகும் சாஹோ படத்திலும் நடித்து வருகிறார்.