சினிமா செய்திகள்

'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால் + "||" + What's wrong with kissing a lip lock?Actress Amala Paul

'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்

'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்
ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு என நடிகை அமலாபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படம் வருகிற 19ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை. என்னையும் மீறி நடந்தது. விரும்பி ஏற்றுக்கொண்டேன். நடிகை ஆனபோது என் அப்பா சொன்னார், "நாய் வேஷம் போட்டால் குரைக்க தயங்கக்கூடாது" என்று. அதைத்தான் 'ஆடை' படத்தில் செய்தேன். 

எனக்கு நிர்வாணமாக இருப்பது சவுகரியமானது. எனக்கு என் உடம்பை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த படத்திற்காக நான் என் உடம்பை மெருகேற்றியுள்ளேன். சிக்ஸ் பேக் வைக்குமாறு இயக்குநர் கூறினார். சிக்ஸ் பேக்கிற்கு முயற்சி செய்தால் தான் ஒரு பேக்காவது வரும் என்று நினைத்தோம்.

படத்தின் கதையிலேயே நிர்வாண காட்சி இருந்தது. தெரிந்து தான் ஒத்துக்கொண்டேன்.  அம்மாவிடம் சொன்னேன். முதலில் பயந்தார்கள், பிறகு கதைக்கு தேவையென்றால் தாராளமாக செய் என்றார்கள். படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். 

நிர்வாண காட்சியில் நடித்த நாள் அன்று தான் பதட்டமாக இருந்தது. நடித்து முடித்த பிறகு அழுதேன். அந்த காட்சியை பார்த்து யார் என்ன சொல்வார்கள் என்பதால் ஏற்பட்ட பதட்டத்தில் அழுகை வந்ததை புரிந்து கொண்டேன். நாளை யார் என்ன சொல்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு நானே நம்பிக்கை தெரிவித்துக் கொண்டேன். அதன் பிறகு மகிழ்ச்சியாகி விட்டது.

காமினி கேரக்டரின் குணாதிசயங்கள் இந்த அமலாபாலின் குணாதிசயங்களோடு ஒத்திருக்கும். நானும், ரம்யாவும் 'லிப் லாக்' முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. 

தோழிகள் இருவரும் தங்கள் அதீத அன்பை வெளிப்படுத்த என்ன செய்வீர்களோ அதை செய்யுங்கள் என்றார். நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் 'லிப் லாக்' முத்தம் கொடுத்தேன்.

ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு. படத்தின் நான் லெஸ்பியனாக நடிக்கவில்லை. மைனா படம் என் மனசுக்கு நிறைவான படம். அந்த கேரக்டராக நான் காட்டுக்குள் வாழ்ந்தேன். 

அதன் பிறகு நடித்த படங்கள் எதுவும் எனக்கு மைனா தந்த நிறைவை தரவில்லை. 'ஆடை ' தான் அந்த நிறைவை கொடுத்தது. மைனா கேரக்டரை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தேன். அதேபோல் இப்போது காமினி கேரக்டரை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கிறேன் என்றார்.