சினிமா செய்திகள்

அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை ; காதலர் குறித்து மனந்திறந்த நடிகை அமலா பால் + "||" + ‘He is the truth in my life’: Amala Paul opens up on her current boyfriend

அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை ; காதலர் குறித்து மனந்திறந்த நடிகை அமலா பால்

அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை ; காதலர் குறித்து மனந்திறந்த நடிகை அமலா பால்
அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை என தனது காதலர் குறித்து நடிகை அமலா பால் மனந்திறந்த பேட்டி அளித்து உள்ளார்.
2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவாகரத்து செய்துகொண்டார்கள். சமீபத்தில் இயக்குநர் விஜய்க்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில்  தனது காதலர் குறித்து நடிகை அமலாபால்  பிலிம்கம்பானியன் சவுத் இணையதளத்துக்கு  மனந்திறந்த பேட்டியளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் இப்போது காதல் உறவில் உள்ளேன். ஆடை கதையைக் கேட்டபோது அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் என்னிடம் முதலில் சொன்னது, நான் முதலில் இதற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் 100 சதவீதம் தயாராக வேண்டும் என்று கூறினார்.

நான் தற்போது மாறியதற்கும், என் வேலை குறித்த பார்வைக்கும் அவரே காரணம். தாயால் மட்டும் நிபந்தனையற்ற அன்பை வழங்க முடியும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியும் என எண்ணியிருந்தேன். ஆனால் தன்னாலும் அவற்றைச் செய்யமுடியும் என எனக்கு அவர் நிரூபித்துள்ளார். 

தன்னுடைய வேலையை எனக்காக விட்டுவிட்டார். சினிமா மீதான என்னுடைய ஆர்வத்தை அவர் அறிவார். அதற்காக என்னை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கமாட்டார். என் படங்களைப் பார்த்துவிட்டு, நான் ஒரு மோசமான நடிகை என்று குறிப்பிட்டார். 

என்னுடைய மூன்றாம் கண்ணை திறந்தவர் அவர்தான். பாதுகாப்பற்ற சூழலில் நடிகர்கள் உள்ளதால் தன்னைப் பாராட்டும் நபர்களையே அருகில் வைத்திருப்பார்கள். நானும் அப்படித்தான். என்னைச் சுற்றி உள்ளவர்கள் உண்மை நிலையைச் சொல்வதில்லை. அவர்தான் பிறகு என் வாழ்வில் வந்து, என் குறைகளைக் களைந்தெடுத்தார். என் வாழ்வின் உண்மை அவர்தான் என்று கூறியுள்ளார்.