சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை அஜித்குமார் படம் ஆகஸ்டு 8–ந் தேதி ரிலீஸ் + "||" + Ajith Kumar's film Release on August 8

நேர்கொண்ட பார்வை அஜித்குமார் படம் ஆகஸ்டு 8–ந் தேதி ரிலீஸ்

நேர்கொண்ட பார்வை அஜித்குமார் படம் ஆகஸ்டு 8–ந் தேதி ரிலீஸ்
அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை பட்ம் ஆகஸ்டு 8–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. அஜித் வக்கீல் வேடத்தில் வருகிறார். ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். 

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்கு அஜித்குமார் உதவி செய்து சிக்கலில் இருந்து மீட்பது கதை. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.  அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இரண்டு பாடல்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த படம் சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. பின்னர் முன்னதாக 10–ந் தேதியே ரிலீஸ் செய்ய யோசிக்கிறார்கள் என்றும் பேசினர். 

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.