டிரெய்லரில் சர்ச்சை வசனம் சந்தானம் படத்தை தடை செய்ய மனு


டிரெய்லரில் சர்ச்சை வசனம் சந்தானம் படத்தை தடை செய்ய மனு
x
தினத்தந்தி 17 July 2019 10:45 PM GMT (Updated: 2019-07-17T23:06:00+05:30)

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து திரைக்கு வரவுள்ள 'ஏ1' படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள புதிய படம் ‘ஏ1.’ இதில் சந்தானம் ஜோடியாக தாரா நடித்துள்ளார். ஜான்சன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

“ஏ1 அக்கியுஸ்டு நம்பர் ஒன் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி கிண்டல் செய்தும் புண்படுத்தும் நோக்கிலும் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தை தடை செய்ய வேண்டும். படத்தில் நடித்துள்ள சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story