ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் காஜல் அகர்வால் மகிழ்ச்சி


ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் காஜல் அகர்வால் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 5:39 PM GMT)

ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் கோமாளி, பாரிஸ் பாரிஸ், இந்தியன்-2 ஆகிய 3 படங்களும், தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்ற படமும் கைவசம் உள்ளன. இவற்றில் கோமாளி படம் முடிந்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.

இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் ரணரங்கம் தெலுங்கு படமும் வெளியாகிறது. இதில் சர்வானந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். சுதீர்வர்மா இயக்கி உள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது.

ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார். பாரிஸ் பாரிஸ் படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Next Story