ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்


ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
x
தினத்தந்தி 19 July 2019 12:01 AM GMT (Updated: 2019-07-19T05:31:44+05:30)

தமிழில் ‘கபாலி’, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்பப் பாங்காக நடித்து வந்த அவர் இப்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார். 2016-ல் ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கை அறை காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ‘த வெட்டிங் கெஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தேவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலும் இணைந்து நடித்துள்ளனர். இதில் படுக்கை அறை காட்சியொன்றில் ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராதிகா ஆப்தேவுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. இதற்கு ராதிகா ஆப்தே அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

“த வெட்டிங் கெஸ்ட் படத்தில் நிறைய நல்ல காட்சிகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு குறிப்பிட்ட படுக்கை அறை காட்சியை மட்டும் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இது சமூகத்தின் மோசமான மனநிலையையே காட்டுகிறது. படுக்கை அறை காட்சியில் நானும் தேவ்படேலும் இருக்கிறோம்.

ஆனால் தேவ் படேலை விட்டு விட்டு ராதிகா ஆப்தேவின் செக்ஸ் காட்சி என்ற பெயரில் என்னை குறிவைத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தேவ் படேல் செக்ஸ் காட்சி என்று பகிர வேண்டியதுதானே. எதற்காக நடிகர் பெயரை விட்டு விடுகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story