சினிமா செய்திகள்

விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்க மாதேஷ் டைரக்‌ஷனில் ‘சண்டக்காரி தி பாஸ்’ + "||" + Shriya opposite Vimal, In Direction mathesh 'Sandaikari The Boss'

விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்க மாதேஷ் டைரக்‌ஷனில் ‘சண்டக்காரி தி பாஸ்’

விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்க மாதேஷ் டைரக்‌ஷனில் ‘சண்டக்காரி தி பாஸ்’
திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி கேரளாவில் வெற்றி பெற்ற மலையாள படம், ‘மை பாஸ்.’ இந்த படத்தை ‘சண்டக்காரி தி பாஸ்’ என்ற பெயரில், தமிழில் தயாரிக்கிறார்கள்.
விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். திரைக்கதை அமைத்து டைரக்டு செய்பவர், ஆர்.மாதேஷ். இவர், விஜய் நடித்த ‘மதுர,’ பிரசாந்த் நடித்த ‘சாக்லட்,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ வினய் நடித்த ‘மிரட்டல்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை இயக்கியவர். 

படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:-

‘‘வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட நகைச்சுவை படம், இது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாகி வருகிறது. பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. தற்போது கேரளாவில் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், தெலுங்கு பட வில்லன் தேவேந்தர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். குருதேவ் ஒளிப் பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. “திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” - வரலட்சுமி சரத்குமார்
விமல்-வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடித்துள்ள படம் கன்னி ராசி. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.