சிவா திரைக்கதை - வசனம் - நடிப்பில் இந்தியா-ஜப்பான் கூட்டு தயாரிப்பு, ‘சுமோ’


சிவா திரைக்கதை - வசனம் - நடிப்பில் இந்தியா-ஜப்பான் கூட்டு தயாரிப்பு, ‘சுமோ’
x
தினத்தந்தி 19 July 2019 10:17 AM GMT (Updated: 2019-07-19T15:47:12+05:30)

சென்னை-28, தமிழ் படம், வணக்கம் சென்னை, தில்லுமுல்லு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர், சிவா. இவர் திரைக்கதை-வசனம் எழுதி ஒரு புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘சுமோ.’

சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வி.டி.வி.கணேஷ் நடிக்கிறார். யோகி பாபுவும் இருக்கிறார்.

‘பிப்ரவரி-14,’ ‘ஆயிரம் விளக்கு’ ஆகிய படங்களை இயக்கிய ஹோசிமின் டைரக்டு செய்கிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி ஐசரி கே.கணேஷ் கூறியதாவது:-

‘‘இது, இந்தோ-ஜப்பானிய கூட்டு தயாரிப்பு. அங்கு அளவுக்கு மீறி மிக குண்டானவர்களை, ‘சுமோ’ என்று அழைப்பார்கள். குண்டு குண்டாக இருக்கும் சுமோக்கள் 18 பேர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கிறோம். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘சுமோ’ தயாராகி வருகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் படம். ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது.’’

Next Story