சினிமா செய்திகள்

அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் 58-வது படம் + "||" + The 58th film of Vikram starring Ajay Gnanamuthu

அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் 58-வது படம்

அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் 58-வது படம்
படத்துக்கு படம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் வெகு சில நடிகர்களில், விக்ரமும் ஒருவர். இவர் இதுவரை 57 படங்களில் நடித்து இருக்கிறார். இவரது 58-வது படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.
‘டிமாண்டி காலனி,’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக் கிறார்.

விக்ரம், ஏ.ஆர்.ரகுமான், அஜய் ஞானமுத்து ஆகிய மூன்று பேரும் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்குகிறது. 2020-ல் கோடை கொண்டாட்டமாக படம் திரைக்கு வரும்.

படத்தை பற்றி டைரக்டர் அஜய் ஞானமுத்து கூறும்போது, ‘‘அதிரடி சண்டை காட்சிகளும், திகிலும் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்’’ என்றார்.