வயதாகும்போது எப்படி இருப்பார்கள்? குஷ்பு, சுருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள்


வயதாகும்போது எப்படி இருப்பார்கள்? குஷ்பு, சுருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள்
x
தினத்தந்தி 19 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-19T22:45:26+05:30)

சமூக வலைத்தளத்தில் இப்போது ‘ஓல்டு பேஸ் சேலஞ்ச்’ வைரலாகி வருகிறது.

‘ஆப்’ மூலம் வயதாகும்போது தனது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும். அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ‘ஆப்’பில் தங்கள் புகைப் படங்களை வயதான தோற்றத்துக்கு மாற்றி வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகை குஷ்புவும் இந்த சவாலில் பங்கேற்றுள்ளார். தனது புகைப்படத்தை ஓல்டு ஏஜ் பில்டரில் போட்டு வயதான தோற்றத்துக்கு மாற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சருமம் சுருங்கி வயதான தோற்றத்திலும் குஷ்பு அழகாகவே இருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள். சமூக வலைத்தளத்திலும் அதனை வைரலாக்கி வருகிறார்கள்.

இதுபோல் நடிகை சுருதிஹாசனும் பேஸ் ஆப் மூலம் மாற்றிய தனது வயதான தோற்றத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண்தவான் ஆகியோரும் பேஸ் ஆப் படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Next Story