14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா


14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 2019-07-19T23:33:00+05:30)

நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது.

அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. இப்போது வாய் பேசாத காது கேளாத பெண்ணாக ‘நிசப்தம்’ படத்தில் நடிக்கிறார். இதில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-

“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது சுலபமல்ல, முழு கதையையும் நடிகை மட்டுமே தோளில் சுமக்க வேண்டி இருக்கும்.  கதாநாயகனுடன் நடிப்பதென்றால் நாலைந்து பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து விட்டு போய்விடலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நாயகன் வேலையையும் நடிகைதான் சேர்த்து செய்ய வேண்டும்.

நிறைய வியர்வை சிந்த வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நடிகையை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. படம் வெற்றி பெறுமா என்று தயாரிப்பாளர்கள் போலவே எனக்கும் பயம் இருக்கும். பலனை பற்றி மிகவும் கவலைப்படுவேன். நிறைய நெருக்கடிகளும் இருக்கும்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Next Story