ரூ.70 கோடியில், ஒரு சண்டை காட்சி!


பிரபாஸ்
x
பிரபாஸ்
தினத்தந்தி 21 July 2019 9:16 AM GMT (Updated: 2019-07-21T14:46:59+05:30)

‘பாகுபலி’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், பிரபாஸ்.

அந்த படத்தை அடுத்து, ‘சாஹோ’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதையம்சம் கொண்ட படம், இது. ஒரு சண்டை காட்சிக்காக மட்டும் ரூ.70 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது. பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகள், பெரிய பெரிய அரங்குகள் அமைத்து படமாக்கப் படுகின்றன.

Next Story