‘‘கர்ப்பிணி பெண்ணின் உடலை விமர்சிக்கலாமா?’’


சமீரா ரெட்டி
x
சமீரா ரெட்டி
தினத்தந்தி 21 July 2019 9:22 AM GMT (Updated: 2019-07-21T14:52:26+05:30)

சமீரா ரெட்டி சமீபத்தில் தனது 2-வது குழந்தையை பெற்றெடுத்தார்.

அவர் கர்ப்பமாக இருந்தபோது தனது தோற்றத்தை துணிச்சலுடன் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அது பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

‘‘பிரசவத்துக்குப்பின் நீங்கள் மீண்டும் உற்சாகமாக எப்போது நடிக்கப் போகிறீர்கள்?’’ என்று ஒருவர் கேட்ட கேள்வி, சமீராரெட்டியை கோபப்படுத்தியது. ‘‘என் உடலை வைத்து விமர்சிப்பவர்களை பார்த்து கேட்கிறேன். நீங்களும் ஒரு பெண் வயிற்றில் இருந்துதானே வந்தீர்கள்...பிரசவத்துக்குப்பின் எப்போது உற்சாகமாக மாறினீர்கள்? என்று உங்கள் அம்மாவிடம் கேட்க முடியுமா?’’ என்று சமீராரெட்டி கேட்டு இருக்கிறார்.

Next Story