தீராத காதல் கொண்ட இனியா!


இனியா
x
இனியா
தினத்தந்தி 21 July 2019 9:40 AM GMT (Updated: 2019-07-21T15:10:20+05:30)

தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், இனியா.

இவர் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 3 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இசை மற்றும் நடனத்திலும் இவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இதற்காக, ‘மியா’ என்ற பெயரில் ஒரு வீடியோ ஆல்பத்தை தயாரித்து இருக்கிறார்.

சர்வதேச நடன போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணுக்கு எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக இருந்து நடனத்தை கற்றுக் கொடுக்கிறான். அந்த பெண்ணை வெற்றி பெற செய்கிறான். இதுதான் அந்த வீடியோ ஆல்பத்தின் கதை.

இதுபற்றி இனியா கூறும்போது, ‘‘நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை மேடைகளில் மட்டுமே ஆடியிருக்கிறேன். முதல் முறையாக பாட்டையும், நடனத்தையும் ஒன்றிணைத்து, மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன்’’ என்றார்.


Next Story