சினிமா செய்திகள்

சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு + "||" + Prime Minister Modi has asked Actor Surya to speak - Actor Rajinikanth talks at the Kappan Music Launch Festival

சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
நடிகர் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளதாக, காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை,

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய வைரமுத்து, “ இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார்.


பாடலாசிரியர் கபிலன் பேசுகையில், “புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார்” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் - 45 நிமிடங்கள் படகில் பயணம்
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அப்போது 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்தார்.
2. குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி
குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு
சரத்பவார் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து, பாதி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.