சினிமா செய்திகள்

பாலியல் புகார் கூறிய நடிகை இஷா குப்தா மீது வழக்கு + "||" + Complaining of sex Case against actress Isha Gupta

பாலியல் புகார் கூறிய நடிகை இஷா குப்தா மீது வழக்கு

பாலியல் புகார் கூறிய நடிகை இஷா குப்தா மீது வழக்கு
‘மீ டூ’வில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.
வேண்டாதவர்களை பழிவாங்க ‘மீ டூ’வை பயன்படுத்துகின்றனர். பிரபல வில்லன் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா சொன்ன பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று போலீஸ் கைவிரித்துள்ளது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை இஷா குப்தா ஓட்டலில் ஒருவர் கண்ணாலேயே தன்னை பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டினார்.


இதுகுறித்து அவர் கூறும்போது, “டெல்லியில் உணவகத்தில் சாப்பிட சென்றபோது ஒருவர் கண்களால் என்னை பலாத்காரம் செய்தார். அவரை எச்சரித்தும் பொருட்படுத்தவில்லை” என்றார்.

இஷாவை கண்களால் பலாத்காரம் செய்தவர் ஓட்டல் உரிமையாளர் ரோஹித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரது புகைப்படத்தை இஷா குப்தா தனது டுவிட்டரில் வெளியிட்டு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா? என்று கேள்வி எழுப்பி கண்டித்தார்.

இந்த நிலையில் இஷா குப்தா தனக்கு எதிராக தவறாக அவதூறு பரப்புகிறார் என்று ஓட்டல் உரிமையாளர் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த செய்தியை படித்த இஷா குப்தா கூறும்போது, “காலையில் எழுந்ததும் இழிவான செய்தியை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை பூமியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் நாள்” என்று கூறியுள்ளார்.