ரசிகர்களை கவர்ந்த விஜய், அஜித் பட பாடல்கள்


ரசிகர்களை கவர்ந்த விஜய், அஜித் பட பாடல்கள்
x
தினத்தந்தி 21 July 2019 11:01 PM GMT (Updated: 2019-07-22T04:31:40+05:30)

விஜய்யின் பிகில், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

 பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானும் சிங்கப்பெண்ணே என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடல் சில தினங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக சமூக வலைத்தளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாடல் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த நிலையில் சிங்கப்பெண்ணே பாடல் நாளை (23-ந்தேதி) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்-வித்யாபாலன் ஜோடியாக நடித்துள்ளனர். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற வானில் இருள் பாடல் ஏற்கனவே வெளியானது.

தற்போது இன்னொரு பாடலையும் வெளியிட்டுள்ளனர். இதில் தீ முகம்தான் யார் இவன்தான், ஓர் அடிதான், பார் இடிதான். நீ எதிரியா உதிரியா பதறியே வா, மோதிப்பாரு, பிரிச்சு பிரிச்சு மேயுறான் போன்ற வரிகள் உள்ளன. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story