சினிமா செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி? + "||" + Vijay Sethupathi role as Sri Lankan cricketer Muralitharan?

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற சம்பவத்தை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது.

1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதால் படத்துக்கு 83 என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இவர் பத்மாவத் படத்தில் நடித்து பிரபலமானவர். நடிகை தீபிகா படுகோனேவை காதல் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 83 படத்தில் தீபிகா படுகோனேவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுபோல் ராகுல் டிராவிட், யுவராஜ்சிங் ஆகியோர் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாக தயாராக உள்ளது.

இதில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முத்தையா முரளிதரன் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். எனவே படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.