சினிமா செய்திகள்

புதிய படத்தில் திரிஷா, சிம்ரன் + "||" + Trisha and Simran in the new movie

புதிய படத்தில் திரிஷா, சிம்ரன்

புதிய படத்தில் திரிஷா, சிம்ரன்
இந்தி படங்களில் ஒரே படத்தில் முன்னணி நடிகைகள் இணைந்து நடிக்கும் வழக்கம் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகிலும் அதுபோல் நடிக்க ஆரம்பித்து உள்ளனர்.
சி-3 படத்தில் அனுஷ்காவும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்தார்கள். பாகுபலியில் அனுஷ்காவும், தமன்னாவும் நடித்தனர்.

விரைவில் திரைக்கு வர உள்ள ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் நடித்துள்ளனர். கமலின் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று 3 கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது திரிஷாவும், சிம்ரனும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

சிம்ரன் 1990-களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்தார். சமீபகாலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரிஷா பரமபத விளையாட்டு என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சிம்ரனுடன் திரிஷா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘சுகர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அபினய் கதாநாயகனாக நடிக்கிறார். சதிஷ், ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார். இதில் சிம்ரனும் திரிஷாவும் அக்காள், தங்கையாக நடிக்கின்றனர். இருவரும் தண்ணீருக்கு அடியில் நடக்கும் ஒரு சண்டை காட்சியிலும் விசேஷ பயிற்சி பெற்று நடித்து இருக்கிறார்கள்.