சினிமா செய்திகள்

பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல் + "||" + Songs depicting women as high, In Vijay's Bigil movie

பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்

பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

பிகில் படத்தில் விஜய் தோற்றங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடி உள்ளார். அந்த பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். பெண்களை போற்றும் வகையிலும் அவர்களை சாதிக்க தூண்டும் வகையிலும் இந்த பாடல் உருவாகி உள்ளது.

“சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்ப்பதற்கே, ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு. உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு. அன்னை தங்கை மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும். நீ பயமின்றி துணிந்து செல் காலங்கள் மாறும் கலங்காதே உன் துன்பம் வீழும் நாள் வரும் உனக்காக நீயே உதிப்பாயம்மா” என்பன போன்ற வரிகள் பாடலில் உள்ளன.

விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். பெண் வீராங்கனைகளை வெற்றிக்கு ஊக்குவிக்கும் காட்சியில் இந்த பாடல் இடம்பெறும் என்று தெரிகிறது.