இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெருவோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா


இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெருவோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா
x
தினத்தந்தி 25 July 2019 7:53 AM GMT (Updated: 2019-07-25T13:23:45+05:30)

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமின் மூலம் அதிக வருமானம் பெருவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைச் செய்வதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்ற பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பிரபலங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள்  மற்றும் பலர் இன்ஸ்டாகிராமில் அவர்கள் விளம்பரப்படுத்திய ஒவ்வொரு இடுகைகளுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

இந்த பட்டியலில் ரியாலிட்டி டிவி நட்சத்திரம் மொகுல் கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்தார். இவர் ஒவ்வொரு பதிவிற்கும் 1,266,000 டாலர் சம்பாதித்து உள்ளார்.

பிரியங்கா சோப்ரா  ஒரு பதிவிற்கு 271,000 டாலர் சம்பாதித்து 19-வது இடத்தைப் பிடித்தார். விராட் கோலி ஒவ்வொரு பதிவிலும் 196,000 டாலர் சம்பாதித்து 23-வது இடத்தில் உள்ளார்.

முதல் 25 இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியல் விவரம் வருமாறு:-

கெய்லி ஜென்னர்
அரியனா கிராண்டே
கிறிஸ்டினா ரொனால்டோ
கிம் கதார்சியன்
செலினா கோம்ஸ்
டுவைன் ஜான்சன்
பியோனஸ் நோல்ஸ்
டெய்லர் ஸ்விஃப்ட்
நெய்மர் டா சில்வா சாண்டோஸ் ஜூனியர்
ஜஸ்டின் பைபர்
நிக்கி மினாஜ்
லியோனல் மெஸ்ஸி
கெண்டல் ஜென்னர் 
க்ளோ கர்தாஷியன்
கெவின் ஹார்ட்
டெமி லொவாடோ
டேவிட் பெக்காம்
லெப்ரான் ஜேம்ஸ்
பிரியங்கா சோப்ரா
ரொனால்டோ டி அசிஸ் மொரேரா
கரேத் பேல்
ஸ்லாடன் இப்ராஹிமோவிக் 
விராட் கோலி
லூயிஸ் சுரேஸ்
கோனார் மெக்ரிகோர்


View this post on Instagram

🎯

A post shared by Virat Kohli (@virat.kohli) on


Next Story