சினிமா செய்திகள்

வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal who switched to web series

வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால்

வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால்
நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடிக்கின்றனர்.
 பாபி சின்ஹாவும் வெப் தொடரில் நடிக்கிறார். நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தளபதி என்ற தொடரில் நடிக்கிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் வெப் தொடருக்கு மாறி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான் சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன். அந்த வகையில் இப்போது புதிய பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். ரசிகர்களுக்கு வித்தியாசங்கள் கொடுக்க எல்லோரும் புதிய பிளாட் பாரங்களுக்குள் வர ஆரம்பித்து உள்ளனர்.

சமீபகாலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளனர். அதுபோல் நானும் வெப் உலகத்துக்குள் நுழைய இருக்கிறேன். வெங்கட் பிரபு புதிதாக வெப் தொடர் ஒன்றை எடுக்கிறார். அந்த தொடரில் நான் நடிக்கிறேன்.

10 தொடர்களாக இது வெளிவரும். படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். அது தவிர நான் தமிழில் நடித்துள்ள கோமாளி, தெலுங்கில் நடித்துள்ள ரணரங்கம் ஆகிய படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலில் சிக்கிய காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.
2. “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
3. ‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு பாரிஸ் பாரிஸ், கோமாளி ஆகிய 2 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்–2 படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
4. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்.