சினிமா செய்திகள்

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா + "||" + Samantha raised salary of Rs 3 crore

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா
நடிகைகள் படங்கள் வெற்றி பெற்றதும் சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.14 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார்.

தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.5 கோடி கேட்பதாக தகவல். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் தொடர்ந்து நயன்தாராவே நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதோடு தன்னை மட்டுமே முன்னிறுத்தும் கதைகளிலும் நடிக்கிறார்.

அவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள கொலையுதிர் காலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும் பிகில் படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவும் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் ரூ.2 கோடி வாங்கி வந்த அவர் இப்போது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு பிறகும் அவருக்கு மார்க்கெட் குறையவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சமந்தா படத்துக்கு எதிர்பார்ப்பு!
விஜய் சேதுபதி-திரிஷா நடித்து, கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `96.' இந்த படம் கன்னடத்தில் `ரீமேக்' செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
2. எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ தெலுங்கு படம் நேற்று திரைக்கு வந்தது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சமந்தாவுக்கு, ரசிகர்கள் நடிகர்களுக்கு இணையாக பெரிய கட் அவுட் வைத்துள்ளனர்.
3. தெலுங்கு பட உலகில் பரபரப்பு : சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர், சமந்தா. இவர் தெலுங்கு பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.