சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி + "||" + Rs 1.86 crore for Priyanka Chopra to post an advertisement on Instagram

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி
பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் புகை பிடிக்கும் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று ரசிகர்கள் விளாசினார்கள்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம்பிடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இதில் நடிகைகள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிக்க பெரிய கூட்டம் உள்ளது.

இதை வைத்து அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். பெரிய தொழில் நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் வெளியிட பெரிய தொகை கொடுக்கின்றன. பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை வெளியிட ரூ.1 கோடியே 86 லட்சம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட் டி.வி நடிகை கைலி ஜன்னர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை பதிவிட ரூ.8.7 கோடி வாங்குகிறார்.