சினிமா செய்திகள்

கார்த்தி பட நடிகையிடம் மோசடி + "||" + Actress Nora Fatehi who starred in the movie Karthi was scammed

கார்த்தி பட நடிகையிடம் மோசடி

கார்த்தி பட நடிகையிடம் மோசடி
கார்த்தியின் ‘தோழா’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் நோரா பதேஹி. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வருண் தவானின் ‘ஸ்ட்ரீட் டான்சர்’ இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கை குறித்து நோரா பதேஹி கூறியதாவது:-

“வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவில் வாழ்வது எளிதான காரியம் அல்ல. நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. என்னிடம் பணம் பறிக்கிறார்கள். கனடாவில் இருந்து ஒரு ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் என்னிடம் நேர்மையாக நடக்கவில்லை. இதனால் அந்த ஏஜென்சியில் இருந்து விலக முடிவு செய்தேன்.

உடனே அவர்கள் எனக்கு தரவேண்டிய ரூ.20 லட்சத்தை திருப்பி கொடுக்க மாட்டோம் என்றனர். நான் விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்த ரூ.20 லட்சத்தை இழந்தேன். உழைத்து சம்பாதித்துக் கொள்ளலாம் என்று சமாதானம் அடைந்தேன். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தேன். என்னுடன் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் எனது பாஸ்போர்ட்டை திருடி விட்டனர்.

இதனால் என்னால் கனடாவுக்கு திரும்பி செல்ல முடியவில்லை. படப்பிடிப்புக்கு நடிகை தேர்வு செய்யும் போது நானும் சென்று கலந்து கொள்வது உண்டு. அப்போது என்னை கேலி செய்து சிரித்தார்கள். இதனால் எனக்கு அழுகை வந்தது.”

இவ்வாறு நோரா பதேஹி கூறியுள்ளார்.