சினிமா செய்திகள்

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது + "||" + Ajith Kumar's romantic song has been released

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது

அஜித்குமார் படத்தின் காதல் பாடல் வெளியானது
அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது.
அஜித் வக்கீல் வேடத்தில் வருகிறார். ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். 

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். பிரச்சினையில் சிக்கும் 3 பெண்களுக்கு அஜித்குமார் சட்ட உதவி செய்து மீட்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற காதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த பாடலில், “நடைபாதை பூவனங்கள் பார்த்து நிகழ்கால கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம். உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்கள் சிறகாய் சேர்ந்திருப்போம் அகலாதே அகலாதே நொடி கூட நகராதே செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே நகராமல் உன்முன் நின்றேன், பிடிவாதம் செய்ய வேண்டும். அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும். இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ” என்பன போன்ற வரிகள் இடம்பெற்று உள்ளன.