சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, திரிஷா தனது சிகை அலங்காரத்தில் என்ன மாற்றம் செய்து இருக்கிறார்? (பி.வினாயக பாண்டியன், சென்னை–1)

அவர் தனது நீளமான தலைமுடியை குறைத்து இருப்பதுடன், ‘பாப் கிராப்’ செய்து இருக்கிறார்!

***

நடிகர் விக்ரம் படத்துக்கு படம் தனது தோற்றத்தை மாற்றுவது ஏன்? (கே.ஸ்ரீதர், திருச்சி)

இன்றைய தமிழ் பட உலகில் கதாநாயகர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி இருந்து வருகிறது. அந்த போட்டியில் ஜெயிப்பதற்கே படத்துக்கு படம் விக்ரம் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறார்!

***

குருவியாரே, தெலுங்கு பட உலகில், ‘நம்பர்–1’ கதாநாயகி கீர்த்தி சுரேசா, ரகுல் பிரீத்சிங்கா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

தெலுங்கு பட உலகில் ‘நம்பர்–1’ நாயகியாக ரகுல் பிரீத்சிங் இருந்தார். அவரை கீர்த்தி சுரேஷ் முந்தி விட்டார்! இப்போது அங்கே ‘நம்பர்–1,’ கீர்த்தி சுரேஷ்தான்!

***

சமீபகாலமாக பேய் படங்கள் அதிகமாக தயாராக என்ன காரணம்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

கதை பஞ்சம்தான் காரணம். காலியான இடத்தை பேய்கள் பிடித்துக் கொண்டன!

***

குருவியாரே, திரையுலகில் உள்ள பிரச்சினைகளையும், சமூக பிரச்சினைகளையும் அலசி ஆராய்வதற்கான திறமை மிகுந்த 2 நடிகைகளை கூற முடியுமா? (ஏ.பிரவீன்குமார், காஞ்சீபுரம்)

கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன்!

***

சூர்யா–கார்த்தி ஆகிய 2 சகோதரர்களிடமும் உள்ள மிக நல்ல சுபாவம்–மற்றவர்கள் பாராட்டும்படியான குணநலன்கள் என்ன? (கே.தமிழ்செல்வன், பட்டுக்கோட்டை)

இருவரிடமும் உள்ள ஒற்றுமையும், சகோதர பாசமும்...!

***

குருவியாரே, குழந்தை நட்சத்திரங்களில் அதிக சம்பளம் வாங்கியவர் யார்? (கே.ஆர்.உதயகுமார், சென்னை–1)

பேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும்...!

***

இந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்? இரண்டாவது இடம் யாருக்கு? (பொன்.சம்பந்தன், வந்தவாசி)

இந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகை, கங்கணா ரனாவத்! இரண்டாவது இடத்தில் இருப்பவர், தீபிகா படுகோனே!

***

குருவியாரே, நரைத்துப்போன வெள்ளை மீசை மற்றும் தாடியில் கூட அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் யார்–யார் என்று சொல்ல முடியுமா? (ஆர்.கே.சுதாகரன், காட்பாடி)

ரஜினிகாந்த், அஜித்குமார்! (பெண்கள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பில் கிடைத்த தகவல், இது!)

***

நயன்தாரா திகில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது ஏன்? (வி.மாணிக்கவேல், சாத்தூர்)

அவர் நடித்த திகில் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், பேய் மற்றும் திகில் படங்களுக்கு நயன்தாரா அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்!

***

குருவியாரே, நிவேதா பெத்துராஜ் தமிழ் பெண்ணா? (எஸ்.புகழேந்தி, பெரியகுளம்)

துபாயில் வாழ்ந்த தமிழ் பெண். அவருடைய பூர்வீகம், மதுரை!

***

ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் படம் எது? அதுவும் பேய் படமா? (கா.கோவிந்தராஜ், கோபிசெட்டிப்பாளையம்)

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் ‘சூப்பர் ஹீரோ’வாக நடிக்க இருக்கிறார். இதுவும் திகில் கலந்த கதைதான்!

***

குருவியாரே, இப்போது உள்ள கதாநாயகிகளில் குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்டவர் யார்? அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எந்த அளவில் இருக்கிறது? (எஸ்.கோட்டைசாமி, வால்பாறை)

குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்டவர், தமன்னா! இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால்தான் 12 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் பிடித்த திரைப்பட பாடல் எது? (வெ.சுரேஷ்பாபு, அரக்கோணம்)

‘‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போதைடி...’’

***

குருவியாரே, தமிழ் பட உலகில் கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருப்பது உண்மையா? அப்படி போட்டியிருந்தால், அதில் பாதிக்கப்பட்டவர் யார்? (கே.பி.சந்தோஷ், பெங்களூரு)

கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருப்பது உண்மை. அதனால் பாதிக்கப்பட்ட சமீபகால நடிகை, ஸ்ரீதிவ்யா!

***

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மற்ற பாடகர்களில் இருந்து எப்படி தனித்துவம் உள்ள பாடகராக வேறுபட்டார்? (சூர்யபிரகாஷ், மதுரவாயல்)

கதாநாயகர்களின் குரலுக்கு ஏற்ப, அவர்கள் பாடியது போலவே குரலை மாற்றி பாடும் தனித்திறமை கொண்ட ஒரே பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான். எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல், சிவாஜிக்கு ஒரு குரல், ஜெய்சங்கருக்கு ஒரு குரல் என நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றி பாடி, ஆச்சரியப்பட வைத்தார்!

***

குருவியாரே, பட வாய்ப்புகள் இழந்து வீட்டில் இருக்கும் பழைய கதாநாயகர்களை ஒன்று சேர்த்து, ‘மல்ட்டி ஸ்டார்’ படம் எடுத்தால் நிச்சய வெற்றி கிடைக்குமே...இதுபற்றி எந்த பட அதிபரும் யோசிப்பதில்லையே, ஏன்? (கே.என்.வித்யாசாகர், அய்யப்பன்தாங்கல்)

இதுபற்றி எந்த தயாரிப்பாளரும் யோசிக்காமல் இல்லை. அப்படி பல கதாநாயகர்களை இணைத்து படம் எடுத்து வெளியிட்டால், தியேட்டரில் நடக்கும் ரசிகர்கள் சண்டையை சமாளிப்பது எப்படி? என்றும் யோசிப்பதால், ‘மல்ட்டி ஸ்டார்’ படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்!

***

மஞ்சிமா மோகனுக்கு அதிக பட வாய்ப்புகள் வராதது ஏன்? (இசக்கிராஜா, உசிலம்பட்டி)

மஞ்சிமா மோகனின், அகலமான இடுப்பழகுதான் காரணமாம்!

***

குருவியாரே, ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பவர் யார்? (டி.ராஜன், கோச்சடை)

மஞ்சுவாரியர்!

***

அஞ்சலியிடம் உள்ள தனித்திறமை எது? (பெ.அன்பரசன், தூத்துக்குடி)

அவருடைய வசீகர முகமும், வசன உச்சரிப்பும்...!

***