சினிமா செய்திகள்

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நடிகை சுருதிஹாசன் மகிழ்ச்சி + "||" + 10 years to come to the cinema Actress Shruti hassan is happy

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நடிகை சுருதிஹாசன் மகிழ்ச்சி

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நடிகை சுருதிஹாசன் மகிழ்ச்சி
சுருதிஹாசன் 2009-ல் ‘லக்’ என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 7-ம் அறிவு, 3, புலி, பூஜை, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.  டிரெட்ஸ்டோன் என்ற ஹாலிவுட் டி.வி. தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான ‘சி.ஐ.ஏ.’யின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோகிராமான டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி இந்த தொடரை எடுக்கின்றனர். இதில் டெல்லியில் ஓட்டலில் வேலை பார்த்துக்கொண்டே மறைமுகமாக கொலையாளியாக உலவும் கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் வருகிறார். 10 வருட சினிமா வாழ்க்கை குறித்து சுருதிஹாசன் கூறியதாவது:-


“10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நடிப்பில் விருப்பமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து நடிப்பேன். எனது பெற்றோர்கள் சினிமாவில் இருந்ததால் எளிதாக திரைதுறையில் நுழைய முடிந்தது. ஹாசன் என்று குடும்ப பெயர் அதற்கு பெரிதும் உதவியது. ஆனாலும் அந்த பெயரிலேயே சினிமாவில் நிலைப்பது கஷ்டம்.

சுருதியாக சினிமாவில் நிலைக்க ஆசைப்படுகிறேன். ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெயர் புகழ் சம்பாதிக்க வேண்டும். அதற்காக உழைக்கிறேன். டிரெட்ஸ்டோன் தொடருக்காக ஹங்கேரியில் சண்டை பயிற்சிகள் கற்று வருகிறேன்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...