சினிமா செய்திகள்

நடிகராகும் விக்ரம் தம்பி + "||" + New Acting Vikram Thambi

நடிகராகும் விக்ரம் தம்பி

நடிகராகும் விக்ரம் தம்பி
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர் நடிகராகிறார்.
புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் பற்றி டைரக்டர் இருதயராஜ் கூறும்போது, “பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர். இதற்கு ‘எப்போ கல்யாணம்’ படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது” என்றார்.