சினிமா செய்திகள்

ஆசைக்கு இணங்காததால் நீக்கம் நடிகர்கள் மீது மல்லிகா ஷெராவத் புகார் + "||" + On the Actors for Mallika Sherawat complains

ஆசைக்கு இணங்காததால் நீக்கம் நடிகர்கள் மீது மல்லிகா ஷெராவத் புகார்

ஆசைக்கு இணங்காததால் நீக்கம் நடிகர்கள் மீது மல்லிகா ஷெராவத் புகார்
கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத், சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இந்தியிலும் அதிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும் ஏற்கனவே புகார்கள் கிளம்பின.


இப்போது மல்லிகா ஷெராவத்தும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் கதாநாயகர்களுடன் நெருங்கி பழகுவது இல்லை. தள்ளியே இருப்பேன். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு நான் இணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அதற்கு உடன்படாததால் நிறைய படங்களில் இருந்து நீக்கப்பட்டேன். இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு வரும்படி நேரடியாக என்னை அழைக்காவிட்டாலும் அவர்கள் எதிர்பார்ப்பை புரிந்து நடக்காததால் வெளியேற்றினர்.

நான் துணிச்சலான பெண். என்னை படுக்கைக்கு அழைத்தால் பிரச்சினை வரும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் நேரடியாக அணுகவில்லை. ஆனாலும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்காத காரணத்தால் படங்களில் இருந்து வெளியேற்றினர். மீ டூ இயக்கம் பெண்களுக்கு அவசியமானது.

பல பெண்கள் மீ டூவில் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் ஓரளவு பாதுகாப்பு கிடைத்து உள்ளது.” இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.