சினிமா செய்திகள்

வில்லி வேடத்தில் நமீதா + "||" + Namitha in the role of Villy

வில்லி வேடத்தில் நமீதா

வில்லி வேடத்தில் நமீதா
மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய புலிமுருகன் படத்தில் கவர்ச்சியாக வந்தார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நமீதா. எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, பம்பர கண்ணாலே, நான் அவனில்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, வியாபாரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய புலிமுருகன் படத்தில் கவர்ச்சியாக வந்தார்.


உடல் எடை கூடியதால் படங்கள் குறைந்தன. அதன்பிறகு கடும் உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தார். சிறிது இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் அவர் வில்லி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் சோனல் சவுகான் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வேதிகா வருகிறார். இப்போது நமீதாவையும் வில்லி வேடத்துக்கு தேர்வு செய்துள்ளனர்.

கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் வந்த நமீதா இப்போது வில்லி வேடம் ஏற்கிறார். நமீதா ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.