சினிமா செய்திகள்

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல் + "||" + Diwali Vijay and Dhanush in films

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்
தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.
இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2 பெரிய படங்கள் வருவதால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று இரு வேடங்களில் வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். சென்னையில் கால்பந்து மைதானத்தை அதிக செலவில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.


இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பெண்ணே என்ற பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் வரிகள் பாடலில் உள்ளதாகவும் பாராட்டுகள் குவிந்தது. படத்தில் விஜய்யும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி உள்ளார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்துக்கு இப்போது ‘பட்டாசு’ என்ற பெயர் வைத்து முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மெஹ்ரின் பிரசிதா, சினேகா, ஆகியோரும் நடிக்கின்றனர். பட்டாசு படத்தில் தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துள்ளனர். அதிரடி படமாக தயாராகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள் - டெல்லியில் மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்
தீபாவளியையொட்டி, டெல்லியில் நேற்று பசுமை பட்டாசுகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார்.
2. அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு -அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
3. மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய்?
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
4. புதிய படத்துக்கு தயாராகும் விஜய், அஜித்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார்.
5. கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், விஜய்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.