சினிமா செய்திகள்

45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் + "||" + Ajith Kumar at the 45th Tamil Nadu Shooting Championship

45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார்

45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார்
45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமார்.
சமீப காலமாகவே அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார் அஜித்குமார். 

கடந்த 28ஆம் தேதி கோயம்புத்தூரில் 45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நடிகர் அஜித் குமாரும் தற்போது கலந்து கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி அஜித்குமார் நடித்த ''நேர்கொண்ட பார்வை'' உலகம் முழுவதும்  வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.