சினிமா செய்திகள்

ஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர் + "||" + Anandi paired with Hindi actor

ஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர்

ஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர்
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய காதல் படம் திரைக்கு வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தும். அப்படி ஒரு காதல் படமாக திரைக்கு வரயிருக்கிறது, ‘எங்கே அந்தவான்.’
காதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதை பயணம், இது” என்கிறார், எங்கே அந்தவான் படத்தின் டைரக்டர் ராஜசேகர் துரைசாமி. இவர், டைரக்டர்கள் லிங்குசாமி, உதயசங்கர் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக பணி புரிந்தவர். அவர் மேலும் கூறுகிறார்:-

“கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, உயர் கல்விக்காக சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கிறார், கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம்தான், இந்த படத்தின் கதை. இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவரின் பாராட்டு பெற்ற ஆனந்திக்கு இந்த படம் மேலும் புகழ் சேர்க்கும். இவருக்கு ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகம் ஆகிறார். இவர், ‘ஹிச்கி,’ ‘டியர் சிந்தகி’ ஆகிய இந்தி படங்களில் நடித்தவர். இவர்களுடன் பிரதாப்போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பல விளம்பர படங்களுக்கு இசையமைத்த தீனதயாளன், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். அபுண்டு ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிப்பாளையம், சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.”