சினிமா செய்திகள்

‘ஐ.ஆர்-8’ என்ற பெயரில்ஒரு விவசாயியின் கதை படமாகிறது + "||" + In the name of IR-8 The story of a farmer

‘ஐ.ஆர்-8’ என்ற பெயரில்ஒரு விவசாயியின் கதை படமாகிறது

‘ஐ.ஆர்-8’ என்ற பெயரில்ஒரு விவசாயியின் கதை படமாகிறது
ஒரு விவசாயியின் கதையாக ‘ஐ.ஆர்-8’ படமாகி வருகிறது.
“விவசாயத்தை அழிப்பேன்...பேக்டரியை கட்டுவேன்” என்று கொக்கரிக்கும் வில்லன். “விவசாயத்தை அழித்துவிட்டு சோத்துக்கு என்ன செய்வாய்? வயலில் இறங்கி நாற்று நட்டே தீருவேன்” என்கிறார், கதாநாயகன். அவரை மிரட்ட, அவருடைய தம்பியை கடத்துகிறான், வில்லன். தம்பியை காப்பாற்றியதுடன் வயலில் இறங்கி துணிச்சலாக வேலை செய்கிறார், கதாநாயகன். இது, ‘ஐ.ஆர்-8’ என்ற படத்துக்காக படமான காட்சி.

ஒரு விவசாயியின் கதையாக படமாகி வரும் இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகம் அனீபா, வில்லனாக ஜே.கே. ஆகிய இருவரும் நடித்தனர். இன்னொரு நாயகனாக புதுமுகம் விஷ்வா நடிக்கிறார். கதாநாயகி, பிந்து. ராஜேஷ், அப்புக்குட்டி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். என்.பி. இஸ்மாயில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

சேலம், தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து வருகிறது.