சினிமா செய்திகள்

‘கழுகு-2’முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதை + "||" + kazhugu -2 story takes place in the jungle

‘கழுகு-2’முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதை

‘கழுகு-2’முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதை
கிருஷ்ணா-பிந்து மாதவி நடித்து, 2012-ல் வெளிவந்த ‘கழுகு’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதன் இரண்டாம் பாகம் தயாரானது. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணாவும், பிந்து மாதவியும் ‘கழுகு-2’ படத்திலும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர்.
‘கழுகு-2’ படத்தில் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சத்யசிவா டைரக்டு செய்திருக்கிறார். ‘கழுகு-2’ பற்றி இவர் கூறியதாவது:-

கழுகு படம் போலவே அதன் இரண்டாம் பாக கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதை. காமெடியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திகில் படம், இது. இதில், மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில், கிருஷ்ணா நடித்துள்ளார்.

இந்த படத்திலும் அழுத்தமான காதல் இருக் கிறது. மனதை உருக்கும் உச்சக்கட்ட காட்சியும் இருக்கிறது. வலுக்கட்டாயமாக எதையும் திணிக் கவில்லை. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.”