சினிமா செய்திகள்

முத்தலாக் விவாகரத்து செய்ததாக நடிகை புகார் - அலினா ஷேக் + "||" + Divorce of Muthalak Actress Alina Sheikh complained

முத்தலாக் விவாகரத்து செய்ததாக நடிகை புகார் - அலினா ஷேக்

முத்தலாக் விவாகரத்து செய்ததாக நடிகை புகார் - அலினா ஷேக்
பிரபல போஜ்புரி நடிகை அலினா ஷேக். கணவர் தன்னை முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகை அலினா ஷேக். இவர் 2016-ல் முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் தன்னை முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு 8 மணிக்கு திரும்பிவிடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. எனவே கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தேன். அதன்பிறகு அவருக்கு எதுவும் ஆகவில்லை, நலமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

ஆனாலும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. 10 நாட்களுக்கு பிறகு ரூ.100 முத்திரைத்தாளில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவாகரத்தை என்னால் ஏற்க முடியாது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

என்னை கணவர் வீட்டில் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்கள். 6 மாத கர்ப்பிணியாக இருந்ததில் இருந்து இந்த கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். அப்போதும் போலீசில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் எனது கணவர் தடுத்துவிட்டார்.” இவ்வாறு அலினா ஷேக் கூறியுள்ளார்.