சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம் + "||" + Kamal Indian -2 Change in appearance again

இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம்

இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம்
இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து வசூல் குவித்த இந்தியன் படத்தின் 2-ம் பாகம் பட வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பே கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பை நடத்தினர். படமாக்கிய காட்சிகளை பார்த்தபோது அந்த தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.


அதன்பிறகு படத்தின் பட்ஜெட் தொடர்பாக தயாரிப்பு தரப்புக்கும் ஷங்கருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். கமல்ஹாசனின் வயதான தோற்றத்தையும் மீண்டும் மாற்றி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து இந்த வயதான தோற்றத்தை உருவாக்கியதாகவும், புதிய தோற்றத்தில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் திருப்தியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த தோற்றத்தை வெளியிட உள்ளனர்.

முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். படத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

சித்தார்த், வித்யுத், நெடுமுடி, டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்தில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன்-2 படப்பிடிப்பு ஆந்திர சிறையில், கமல்ஹாசன்
‘இந்தியன்-2’ படத்திற்காக விசேஷ அனுமதி பெற்று ராஜமுந்திரி சிறையில் படப்பிடிப்பு நடந்தது.
2. ‘இந்தியன்-2’ படக்குழுவினருக்கு கமல் அறிவுரை
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.
3. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம்
டைரக்டர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார்.
4. வசூலில் சாதனை படைத்து வரும் பி.எம். நரேந்திரமோடி படம்
திரையிடப்பட்டு சில நாட்களே ஆன பி.எம். நரேந்திரமோடி என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
5. மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது
மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு செய்த பா.ஜனதா பெண் பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.