சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் சூரியும் கதாநாயகன் ஆனார்! + "||" + Comedian Suri Became the hero

நகைச்சுவை நடிகர் சூரியும் கதாநாயகன் ஆனார்!

நகைச்சுவை நடிகர் சூரியும் கதாநாயகன் ஆனார்!
நகைச்சுவை நடிகர் சூரி முதன்முறையாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன் ஆவது தமிழ் பட உலகுக்கு ஒன்றும் புதுசு அல்ல. மறைந்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, நாகேஷ், மற்றும் கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து, பின்னர் கதாநாயகன் ஆனார்கள். இதில், வெற்றி பெற்றவர்களும் உண்டு. தோல்வி அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் அறிமுகமாகி, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த சூரி, முதன்முறையாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. வெற்றிமாறன் டைரக்டு செய்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இவர், ‘விண்ணைத்தாண்டி வருவாயா,’ ‘கோ,’ ‘நீதானே என் பொன்வசந்தம்,’ ‘யாமிருக்க பயமே’ உள்பட பல படங்களை தயாரித்தவர்.

‘‘குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில், நகைச்சுவை விருந்தாக படம் தயாராகிறது’’ என்று படக்குழுவினர் கூறினார்கள்.