சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி + "||" + Dhanush-Aishwarya Lakshmi in Karthik Subburaj Direction

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி
கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
‘மாரி-2’ படத்தில் நடித்த தனுஷ் அடுத்து, ‘அசுரன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதையடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும், மாரி செல்வராஜ் டைரக்‌ஷனில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவும் சம்மதித்து இருக்கிறார்.

இது, ஒரு சஸ்பென்ஸ்-திகில் படம். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சஷிகாந்த், சக்கரவர்த்தி ராமச்சந்திரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.