இந்தி படத்தில் ரூ.40 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா


இந்தி படத்தில் ரூ.40 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா
x
தினத்தந்தி 3 Aug 2019 1:30 AM GMT (Updated: 2 Aug 2019 11:55 PM GMT)

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

ரெட்டி இந்த படம் தமிழில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக வர்மா என்ற பெயரில் தயாராகிறது. நோட்டா என்ற தமிழ் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் டியர் காமரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா, சுருதி ராமச்சந்திரன், சாருஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். வசூலும் குவிக்கிறது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ரூ.6 கோடி கொடுத்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன்ஜோகர் வாங்கி உள்ளார்.

இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பி அவரை அணுகினர். ரூ.40 கோடி சம்பளம் தருவதாகவும் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கட்டாரும் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தது குறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, “டியர் காமரேட் படத்தில் முழு உழைப்பை கொடுத்து நடித்து இருக்கிறேன். அதே கதாபாத்திரத்தில் மீண்டும் 6 மாதம் செலவழித்து நடிக்க விரும்பவில்லை” என்றார்.

Next Story