சினிமா செய்திகள்

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் எப்போது திரைக்கு வரும்? + "||" + Guruvayare, Rajinikanth's star when will the movie 'Durbar' arrive on the screen?

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் எப்போது திரைக்கு வரும்?

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் எப்போது திரைக்கு வரும்?
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
தமிழ் பட உலகில் பேய் படங்கள் அதிகமாக தயாராவதற்கு காரணம் யார்? (கே.தன்வீர் அகமது, கொடைக்கானல்)

ஜோதிகா! இவர் பேயாக நடித்த ‘சந்திரமுகி’ படம் 800 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றதுடன், வசூல் ரீதியாக சாதனையும் செய்தது. அந்த படத்தின் வெற்றிதான் தமிழ் பட உலகில் அதிக பேய் படங்கள் தயாராவதற்கு காரணமாக அமைந்து விட்டது!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத்சிங் ஆகிய இரண்டு பேரில் உயரமானவர் யார்? (சே.பார்த்திபன், குமார பாளையம்)

இருவருமே உயரமான நாயகிகள்தான். கீர்த்தி சுரேசை விட, ரகுல் ப்ரீத்சிங் 3 அங்குலம் உயரமானவர்!

***

நடிகர் சங்கத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்த நாசர், விஷால், கார்த்தி ஆகிய மூன்று பேரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா? (எஸ்.ஜனகராஜ், டி.கல்லுப்பட்டி)

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாசர், விஷால், கார்த்தி ஆகியோருடன் மேலும் சில பிரபல நட்சத்திரங் களும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் படங்களிலும் ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க நடிகைகள் துணிந்து விட்டது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ரசிகர்களை திருப்தி செய்யவே ‘அப்படி’ நடிக்க துணிந்தார்களாம்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் எப்போது திரைக்கு வரும்? ( எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘தர்பார்’ படத்தை பொங்கல் விருந்தாக கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

***

குருவியாரே, நயன்தாரா படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது, ஓட்டலில்தான் தங்குகிறாராமே...சென்னையில் அவருக்கு வீடு இல்லையா? (வி.கோதண்டராமன், வந்தவாசி)

நயன்தாராவுக்கு சொந்தமாக சென்னையில் 3 வீடுகள் உள்ளன. ஓட்டலில் உள்ள வசதிகள் வீடுகளில் இல்லாததால், ஓட்டலிலேயே அவர் தங்குகிறாராம்!

***

சமீபகால புதுமுக நாயகிகளில் வேகமாக முன்னேறி வரும் நாயகி யார்? (கே.பாபு சங்கர், குடியாத்தம்)

பிரியா பவானி சங்கர்! இவரை ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்!

***

சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகியாக இருந்த அசின் இப்போது எப்படியிருக்கிறார்? (டி.சதீஷ்குமார், பெங்களூரு)

அசின் இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக- சந்தோஷமாக மும்பையில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்!

***

ஜெயம் ரவி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

ஜெயம் ரவி இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 24-வது படம், ‘கோமாளி.’ அடுத்த ரிலீஸாக இந்த படமே வெளிவர இருக்கிறது!

***

குருவியாரே, கவர்ச்சி நடிகை ஷகிலாவுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களா? கேரளாவில் அதிக ரசிகர்களா? (எஸ்.வேணுகோபால், ஸ்ரீரங்கம்)

தமிழ்நாட்டை விட, கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதாக ஷகிலாவே கூறுகிறார்!

***

சராசரி கதாநாயகியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக உயர்வதற்கு யார் காரணம்? (ஏ.ஆல்பர்ட், நாசரேத்)

விஜய் சேதுபதி, வெற்றிமாறன், தமிழ் ரசிகர்கள்!

***

குருவியாரே, செல்போனிலேயே படங்கள் பார்க்கும் ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதே...இனி தியேட்டர்களின் கதி என்ன ஆகும்? (எஸ்.பஜிலா, கோவை)

ஏற்கனவே பெரும் பாலான தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாறி விட்டன. மீதமுள்ள தியேட்டர்களும் திருமண மண்டபம் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிடும்!

***

குஷ்பு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? (எம்.விஜயன், திருப்பூர்)

அவர் எப்போது “மாட்டேன்” என்று சொன்னார்?

***

குருவியாரே, சிவகார்த்தி கேயன் தற்போது நடித்து வரும் படத்துக்கு என்ன பெயர் சூட்டப்பட்டு இருக் கிறது?(கே.ராஜா, கடலூர்)

‘ஹீரோ’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

***

‘மாப்பிள்ளையை பாத்துக்கடீ மைனாக்குட்டி” என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றுள்ளது? (எம்.வெங்கட்ராமன், தேனி)

அந்த பாடல், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘நீதி’ படத்தில் இடம் பெற்றது!