சினிமா செய்திகள்

சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தள்ளிவைப்பு? + "||" + Surya Kappan Release Postponement

சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தள்ளிவைப்பு?

சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தள்ளிவைப்பு?
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் என்.ஜி.கே படம் திரைக்கு வந்தது. இப்போது காப்பான், சூரரை போற்று ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன.
காப்பான் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.

சூர்யா அதிரடி படை போலீஸ் அதிகாரியாக வருகிறார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். கே.வி ஆனந்த் இயக்கி உள்ளார். காப்பான் படத்தை தமிழ், தெலுங்கில் வருகிற 30-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தெலுங்கில் பந்தோபஸ்து என்று பெயர் வைத்துள்ளனர்.


இந்த நிலையில் காப்பான் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்டு 30-ந்தேதி பிரபாஸ் கதாநாயகனாக நடித்து அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு உள்ள சாஹோ படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் திரைக்கு வருகிறது.

பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

தமிழிலும் அவருக்கு மார்க்கெட் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக தியேட்டர்கள் சாஹோ படத்துக்கு ஒதுக்கப்படும் நிலைமை உள்ளது. இதனால் காப்பான் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் எனவே படத்தின் ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் வற்புறுத்துகிறார்கள். எனவே காப்பான் படம் செப்டம்பர் மாதம் 20-ந்தேதிக்கு தள்ளிப்போகலாம் என்று பேசப்படுகிறது.