சினிமா செய்திகள்

‘பிகில்’ படத்தில்விஜய்யுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் + "||" + A.R.Rahman Acting with Vijay

‘பிகில்’ படத்தில்விஜய்யுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

‘பிகில்’ படத்தில்விஜய்யுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்
‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் ஒரு காட்சியில் நடிக்க உள்ளார்.
அட்லி இயக்கும் பிகில் படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் விஜய் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி உள்ளார். இதுபோல் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். பெண்களை போற்றும் வகையிலும், அவர்களை சாதிக்க தூண்டும் வகையிலும் சிங்கப்பெண்ணே பாடல் உருவாகி உள்ளது.

“சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்ப்பதற்கே, ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு. பெண் என்று கேலி செய்த கூட்டம் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு. அன்னை, தங்கை, மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும். நீ பயமின்றி துணிந்து செல். காலங்கள் மாறும் கலங்காதே உன் துன்பம் வீழும் நாள் வரும் உனக்காக நீயே உதிப்பாயம்மா” என்பன போன்ற வரிகள் பாடலில் உள்ளன.

இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் ஒரு காட்சியில் நடிக்க உள்ளார். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரகுமான் தோன்றினாலும் படங்களில் இதுவரை நடிக்கவில்லை. இப்போது முதல் தடவையாக பிகில் படத்தில் நடிக்கிறார்.